பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9


இறக்கத் துணிந்தார். "அரசர் குடியில் பிறந்தவர் தாம் போர் முகத்தைப் பாராது இறக்க நேரின், வீர சுவர்க்கம் புகுதற்கு இயலாது என்ற காரணத்தால் இறந்தவர் உடம்பைத் தருப்பையில் கிடத்தி வாளால் போழ்ந்து, 'போரில் இறந்தவர் அடையும் கதியினை இவர் அடைக' எனக் கடவுளை வேண்டி அடக்கம் செய்வர். இம்மரபில் பிறந்தவர் குழவிப் பருவத்தில் இறந்தாலும், அல்லது முழு வடிவு உருத மனை போல் ஊன் வடிவுடன் பிறந்தாலும், அவ்வுடல்களை மேற்கூறியவாறு வாளால் வெட்டிய பின்பே அடக்கம் செய்வர். அத்தகைய வீரர் மரபினர் மன்னனானயான், சிறைக் காவலர் தம் இருப்புச் சங்கிலியால் பிணைத்து நாய்போல் இழுத்துச் சிறையில் அடைக்க இனியும் என் வயிற்றுத் தீத் தணிய நீரை உண்டு உயிர் வாழேன்' என்று பாடி உயிர் நீத்தார்.

இவரன்றே மானமுடைய மன்னர் ! அரசர்க்கு மானத்தின் மிக்க அறனும் இல்லை, பொருளும் இல்லை, இன்பமும் இல்லை என்பன வற்றை விளக்கியவீரர் அல்லவோ இவர் ? சிறைக் காவலர் இவரைச் சங்கிலி கொண்டு பிணித்துச் சிறைப்படுத்திய நிலையினை உவமையாய்க் கூறிய, "தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய கேள்அல் கேளிர் " என்னும் அடியினைப் படிக்கும்போது அது நாம் இரக்கப் படத்தான் செய்கிறது.