பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47


கூறக் கேட்ட மன்னர் புலவர் இறுக்க வேண்டிய வரியினைத் தள்ளிக் கொடுத்தனர். இவ் வாறெல்லாம் புலவர்கள் கூறும் மொழிகளைக் கேட்டு நடப்பவர் கிள்ளிவளவர். இத்தகைய மன்னர் ஈரமும் வீரமும் கொண்டவராக இருந்தும் தாமும் கவிபாடும் வன்மையும் பெற்றிருந்தார்.

கிள்ளிவளவரது பாடல் புறநானூற்றில் காணப்படுவதாகும். அது தம் நாட்டில் ஈகையில் சிறந்து விளங்கிய சிறு குடி கிழான் பண்ணன் என்பானைப் பற்றிய பாடல். பண்ணன் ஒரு குடியானவன். அவனது இல்லத்தில் எப் போதும் இளஞ்சிறார் கூடி இருக்கப் பெற்றுச் சோற்றுத் திரளைக் கையகத்துக் கொண்டு சென்று கொண்டிருப்பதைக் காணலாம். இளஞ் சிறுவர் சோற்றுத் திரளைப் பெற்றுச் செல்லும் தோற்றம் எறும்புகள் முட்டைகளைக் கொண்டு வரிசை வரிசையாகச் செல்வது போல் காணப்படுமாம். வெண் சோற்றுக்கு முட்டையும் இளஞ்சிறார் ஒழுக்கிற்கு எறும்பின் வரிசையும் நல்ல உவமைகள். இக் காட்சியினைக் கிள்ளிவளவர், "முட்டை கொண்டு வன்புலம் சேரும் சிறு நுண் எறும்பின் ஒழுக்கு ஏய்ப்பச் சோறுடைக் கையர் விறு வீறு இயங்கும் இருங்கிளேச்சிறாஅர் ” என்று குறிப்பிட்டுள்ளார். இங்ஙனம் இப்பண்ணன் இளஞ்சிருர் பசியினால் வாடாதிருக்கும் வண்ணம் அன்னம் அளித்து வந்த காரணத்தால்