பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

மையை நமக்கு நன்கு விளக்குகிறது. உலகம் இடையறாது அழிவுறாமல் இருத்தற்குக் காரணங்களாக இவர் குறிப்பிடுவன மிகமிகப் பாராட்டற்குரியனவாகும். கிடைத்தற்கரிய தேவாமுதம் கிடைப்பினும், தனித்து உண்ணாமல் பிறர்க்கும் ஈந்து உண்பவர் நாட்டில் இருப்பதாலும், எவரோடும் வெறுப்பில்லாதவர்களும், அஞ்சவேண்டியவற்றிற்கு அஞ்சுபவரும், சோம்பலின்றி இருப்பவரும், புகழுக்காக உயிரையும் கொடுப்பவரும் பழி காரணமாக உலகம் பெறுவதாயினும் அதனை ஏற்க இசையாதவர்களும், மனக்கவற்சி இல்லாதவர்களும், தமக்கென முயலாமல் பிறர்க்காக முயல்பவர்களும் உலகில் இருக்கின்ற காரணத்தால் இவ்வுலகம் நிலைத்திருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார். இப்படிக் கூறிய பாடலில் உயிராய் விளங்கும் அடிகள்

புகழ்எனில் உயிரும் கொடுக்குவர்; பழியெனில்

உலகுடன் பெறினும் கொள்ளலர்

என்பன. நற்றிணைச் செய்யுட்பகுதிகள் சுவைதரும் செய்திகளைத் தன் னகத்தே கொண்டுள்ளன. தாய் தன் மகள் புதுமணம் பெற்ற காரணத்தால் வண்டுகள் மொய்க்கும் தோளுடையளாய் இருப்பது குறித்துத் தோழியை நோக்கிக் காரணம் கேட்டபோது, தோழி சமத்காரமாக “சந்தன விறகை அடுப்பில் இட்டதனால், அதில் சூழ்ந்திருந்த வண்டுகள் போக்கிடம் வேறு இன்றி உன்