பக்கம்:கவிபாடிய காவலர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81

யினும், மூவேந்தர் மரபுடன் இவர் இணைத்து வழங்கப்படாமல் குறுநில மன்னர் மரபுடன் இணைத்துப் புலவர்களால் பேசப்பட்டனர்.

இவர் புலவர்களால் பெரிதும் பாராட்டப்பட்டவர். இவரைப் புகழ்ந்து தனி நூல் ஒன்றும் பாடப்பட்டுள்ளது. அந் நூலே பத்துப்பாட்டில் காணப்படும் பெரும்பாணாற் றுப் படையாகும். நக்கண்ணனார் என்னும் புலவரும் இவரைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

பெரும்பாணாற்றுப் படையின் மூலம் இளந்திரையர் வாழ்க்கைக் குறிப்புக்கள் பல புலனாகின்றன. இளந்திரையரது செங்கோன்மை காரணமாக வழிப் போவாரை வெட்டி அவர்கள் கையகத்துள்ள பொருள் களைக் கொள்ளும் வழிபறிக் கொள்ளையர் இலர். இடி விழுந்து இன்னல் உறுத்தாது. பாம்புகள் தீண்டிப் பயம் உறுத்தா. கொடிய விலங்குகள் கொடுமைகள் செய்யா. இளந் திரையருடன் மலைந்தவர் தேயம் பாழ்படும். நயந்தவர் தேயத்தில் நன் பொன் பொலிவு பெறும். முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும் வேண்டுவனவற்றை அளிப்பர். புலவர்கட்குப் பேர் அணிகலன்களும் பிற கலங்களும் கொடுத்து மகிழ்வர். இரவலரது கிழிந்த ஆடையை நீக்கி நல்லாடையினை ஈவர். சோறும் கறியும் கொடுத்து உபசரிப்பவர் என்றெல்லாம் பெரும்பாணாற்றுப்படை கூறிப்பிட்டு இம் மன்னரைப் புகழ்கிறது.