பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 96 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு § என்ற பண்ணோடு பாடப் பெற்ற பாடல்களின் முதல் மொழி செவியில் பட்டவுடன், பட்டிக்காட்டான் வாயி னின்று, செந்தமிழ் நாட்டின் முதன்மொழி செவியில் சேருமுன்னே அந்தமில் லாமல் - உள்ளத்தில் அமுதம் ஊறுதடா (11) என்ற பாடல் பிறக்கின்றது. அடுத்து, சிறு குழந்தைகட்குப் பாடப்பெற்ற பாடல் கள் பாடிய வாய் தேனூறும் வண்ணம் பாடப் பெறுகின் றன. இவற்றைக் கேட்கின்றான் நாட்டுப்புறத்தான். ஓடி விளையாடு பாப்பா - நீ ஒய்ந்திருக்க லாகாது பாப்பா கூடி விளையாடு பாப்பா! - ஒரு குழந்தையை வையாதே பாப்பா! (1) சின்னஞ் சிறுகுருவி போல - நீ திரிந்து பரந்து வா பாப்பா! வன்னப் பறவைகளைக் கண்டு - நீ மனத்தில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா! (2) காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு; மாலை முழுதும்விளை யாட்டு - என்று வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா! (6) துன்பம் நெருங்கி வந்தபோதும் - நாம் சோர்ந்துவிட லாகாது பாப்பா! அன்பு மிகுந்ததெய்வ முண்டு - துன்பம் அத்தனையும் போக்கிவிடும் பாப்பா! (9)