பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயில்வோர் மனத்தில் தோன்றி கவிதையனுபவத்தைக் கிளர்ந் தெழச் செய்கின்றன என்றும் அவை படிப்போரைக் கவிதைய னுபவத்தின் கொடுமுடிக்குக் கொண்டு செலுத்துகின்றன என் றும் கருத்து தெரிவிக்கும் பேராசிரியர் கவிமணி கையாண் டுள்ள படிமங்களை நன்கு வெளிப்படுத்தியுள்ளார். இப்படி மக் காட்சிகள் நம் மூளையில் பதிந்து முருகுணர்ச்சியாக மாறுவதை அறிவியல் பூர்வமாகவும் விளக்குகிறார் பேராசிரி 钴”。 கவிஞரின் மொழிக் கொள்கையை ஆராய்கின்ற பேராசிரி யர் 'நூல் முழுவதும் கையாளப்பெறும் வட்டார வழக்குச் சொற்கள் காவியத்தை இயல்புடைத்தாக்குகின்றன. எடுத்துக் காட்டாக ஏகாங்கி, கண்டாங்கி, குலுக்கை, களரி கட்டுதல், மலரணை முதலிய பல சொற்களைக் காட்டுகிறார். கல்லாதா ருக்கும் விளங்கும் சொற்களைப் பயன்படுத்துகிறார். பெரும் பாலும் கதாபாத்திரங்களே பேசுவதாக இயற்றுவது அவரது வழக்கமாக உள்ளது என்கிறார் ஆசிரியர். இதுகாறும் மேற்கூ றிய கவிதைகளால்... இவருடைய தமிழ் என்றும் உள்ளத்தில் போற்றி வைக்கத்தகும் பொற்களஞ்சியம். நமது மூதாதைய ரின் பண்பாட்டிலும் மரபிலும் ஊறித் தோய்ந்து இனிமை முற்றிய தமிழ், உண்மை நிரம்பிய தமிழ், கல்லார்க்கும் கற்றார்க்கும் நாட்டார்க்கும் நகரத்தார்க்கும் ஒன்றுபோல நலம் இனளிக்கும் தமிழ் (பக்.263) என்ற மதிப்பீடு பேராசிரியரின் நுண்மாண் நுழைபுலத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது. 'சாந்தலிங்கத் தம்புரான் தண்ணீரில் மிதந்து வந்த காகி தக் கப்பலைக் கையில் எடுத்துப் படித்துப் பார்த்து அதிசயித் துப் போனார். அழகழகான முத்து முத்தான எழுத்தில் தமிழ்ப் பாடல்கள் அதில் எழுதியிருந்தன... என்ன ஆச்சரியம்! சின்னச் சின்ன வார்த்தைகளில் புரியக் கூடிய தமிழில் எழுதியிருந்த அந்தப் பாடல்கள் அவருக்குப் பெரிய சந்தோ ஷத்தை உண்டாக்கிற்று. ஆச்சரியத்தோடு எதிர்க்கரையைப் பார்த்த தம்புரானுக்கு ஒரே வியப்பு: அச்சிறுவனை அழைத்து விவரம் கேட்க, அவன் எழுதிய பாட்டுத்தான் அது என அறிந்து வியந்து போகிறார் தம்புரான். தம்பி! என் மடத்துக்கு வா! உனக்கு நான் தமிழ் சொல்லித் தருகிறேன்' என்று குகன் பெரும்புள்ளிகள் என்ற தமது நூலில் கூறுகிறார். அச்சிறுவன் தான் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை. அவருடைய தமிழை அவருடைய கவிதைகளை இன்னும் சொல்லப்