பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

བ་མ་གསྨ. 3.083 སྨན་ལྕི་བ་ கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு } சுயராஜ்யம் வேண்டுமென்ற பாரதவாசிக்கு ஆங்கில அதிகாரி கூறுவதாக தொண்டு செய்யும் அடிமை” {பா.க.தே.கி. 34) என்ற பாடல் அமைந்துள்ளது. தொண்டு செய்யும் அடிமை! - உனக்குச் சுதந்திர நினைவோடா? பண்டு கண்டதுண்டோ? - அதற்குப் பாத்திர மாவாயோ? (1) சாதி சண்டை போச்சோ? - உங்கள் சமயச் சண்டை போச்சோ? நீதி சொல்ல வந்தாய்! - கண்முன் நிற்கொனாது போடா! (2) வெள்ளை நிறத்தைக் கண்டால் - பதறி வெருவலை ஒழிந்தாயோ? உள்ளது சொல்வேன் கேள் - சுதந்திரம் உனக்கில்லை மறந்திடடா (7) இந்தப் பாடல்களைப் பாடக் கேட்ட பட்டிக்காட்டானின் உணர்ச்சி கிளர்ந்தெழகின்றது. உடனே, இவ்வுணர்ச்சிக்கு, 'தொண்டு செய்யும் அடிமை - என்னும் சுடுச ரம்ஓடி மண்டையைத் தாக்குதடா! - நெஞ்சம் மடியப் பாயுதடா! (20) என்று பாவடிவம் அமைகின்றது. பட்டிக்காட்டான் வாய் வழியாக வெளிவந்தாலும் உள்ளிருந்து பேசுபவர் கவிமணி தானே!