பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 112 + இத்தகைய கருத்துகளைக் கொண்ட பாடல்கள் நாட்டுப் புறத்தான் செவியேற்றதும், அவன்து உணர்ச்சி பொங்கி எழுகின்றது. அது, ஏழைத் துயரெல்லாம் - அவனும் எடுத்த டுக்கையிலே மூளை கலங்குதடா - விம்மி மூச்சும் முட்டுதடா (22) என்று பாட்டு வடிவம் கொள்ளுகின்றது. இறுதியாக தன்னால் அனைத்தையும் - பாவின் நயம் அனைத்தையும் சொல்ல முடியவில்லையே என்று கழி விரக்கம் கொண்டு, பாவின் நயமெல்லாம் - யானும் பகர வல்லேனோ? ஆவின் பாற்சுவையை - நாழி அளந்து காட்டிடுமோ! (23) என்று முத்தாய்ப்பு வைத்துத் தன் திறனாய்வைத் தலைக்கட் டுகின்றான். இங்ங்னம் பேசுவதில் வெளிப்படுவது கவி மணியின் குரல்தானே!