பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. சுந்தர மூர்த்தி வழியில் தேவாரத்தில் (ஏழாம் திருமுறை) திருத்தொண்டத் தொகையைப் பாடி அடியார் (சைவ அடியார்கள்) வழிபாட் டைத் தொடங்கி வைத்தவர் சுந்தரமூர்த்தி அடிகள். ல்லைவாழ் அந்தணர்தம் ழ அநதணாத அடியார்க்கும் அடியேன்" என்று இறைவனாலே அடி எடுத்துக் கொடுக்கப் பெற்ற திருத்தொண்டத் தொகை இவ்வாறு தொடங்குகின்றது. 'அடியார்க்கும் அடியாராகின்றார்', 'இதுவே தென் தமிழ்ப் பயனாய் வந்த திருத் தொண்டத் தொகை என்று போற்றப்படும் அற்புதத் திருப்பதிகம் ஆகும். இதனைத் தொடர்ந்து நம்பி ஆண்டார் நம்பி 100 பாடல்களடங்கிய 'திருத் தொண்டர் அந்தாதியாக விரித்துப் பாட வழியாக அமைகின்றது. பின்னர் சேக்கிழார் பெருமான் அவர்களால் பக்திச் சுவை நளிை சொட்டும் திருத்தொண்டர் புராணமாக (பெரிய புராணம்) மேலும் விரிந்தது. இந்தத் தம்பிரான் தோழரின் அடிச்சுவட்டைப் பின்பற்றிக் காந்தியடிகள், தாதாபாய் நெளரோஜி, திலகர், லாலா லஜபதிராய், வ.உ. சிதம்பரம் பிள்ளை போன்ற விடுதலைத் தொண்டர்களைப் பாடிப் போற்றினார் பாரதியார். தொடர்ந்து பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் பல்வேறு தொண்டர்களைத் தம் பாடல்களில் போற்றியுள்ளார். இவர்தம் பாடல்களில் உலகப் பெரியார்கள், நாட்டுப் பற்றாளர்கள், திராவிட இயக்கத் தொண்டர்கள், அறிஞர்கள், வள்ளல்கள், துணை வேந்தர்கள், புலவர்கள், நூல் வெளியீட்டாளர்கள் நடிகர் கள் முதலியோர் இடம் பெற்றனர். 1. சுந்தரர் தேவாரம் 7.39 (பதிகம்) 2. பாவேந்தர் பாரதிதாசன் - ஒரு கண்ணோட்டம் - இயல்-5 காண்க. கவி-9