பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு مؤيد 4 4 { من . இந்த மரபினைத் தொடர்ந்து நம் கவிமணி அவர்க ளும் உலகப் பெரியார்கள், ஞானச் செல்வர்கள், நாட்டுத் தொண்டர்கள் அறிஞர் பெருமக்கள், இசையரசுகள் முதலி யோரைப்பற்றி வாழ்த்துப் பாடல்களாகவும் இரங்கற் பாக் களாகவும், தனியாகப் போற்றும் முறையாகவும் பாடியுள் ளார். இவையாவும் கவிமணியின் பண்பாட்டுணர்ச்சியைக் காட்டுவனவாகவும் அமைகின்றன. இங்ங்னம் பாடப் பெற்றவர்கள் சிலரைப் பற்றி ஈண்டுக் காண்போம். 1. உலகப் பெரியார்கள் திருவள்ளுவர், அண்ணல் காந்தி இவர்கள் கவிமணி யின் பாடல்களில் இடம் பெற்றுள்ளனர். திருவள்ளுவர். உலகப் பெரியார் திருவள்ளுவர்; ஒப் பின்றிச் சிறந்து விளங்குபவர். இவரை உலகினுக்குத் தந்து வான்புகழ் பெற்றது தமிழகம். இவர் இயற்றிய நூல் உலகப் பொதுமறையாகிய திருக்குறள். திருவள்ளுவரைப் பற்றி கவிமணி பத்துப் பாடல்களைப் பாடியுள்ளார்." அவற்றுள் சில: இம்மை மறுமையின் - பயன்கள் எவருமே யடையச் செம்மை நெறியின் - விளங்கும் தெய்வநூல் செய்தோன் (1) வழுக்கள் போக்க வந்தோன் - நல்ல வாழ்வை ஆக்க வந்தோன்; ஒழுக்கம் காட்ட வந்தோன் - தமிழுக்கு உயிரை ஊட்ட வந்தோன் (2) தொன்மை நூல்களெல்லாம் - நன்கு துருவி ஆராய்ந்து நன்மை தீமைகள் வகுத்த நாவலர் கோமான் (3) 3. ம.ம. திருவள்ளுவர்