பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர மூர்த்தி வழியில் 景 箕9 卡 மாசிலாத அன்பை - உன்னை மறக்க வொண்ணா அன்பை தாசனாகும் அன்பை - எனக்குத் தந்தருள்வாய் அம்மா! (7)* என்று அன்னையின் அன்பை மட்டிலுமே வேண்டி நிற்ப வர். 'கற்றுத் தேர்ந்த பண்டிதரும் காணற்கரிய பரம் பொருளை, முற்றி முதிர்ந்த அன்பாலே முழுதும் கண்ட மாமுனிவன். வேத, ஆகமங்கள் விரித்த பொருளையெல் லாம் ஒதாது உணர்ந்த உரவோன். மங்கையரைத் தீண்டியறி யாத மகான். இவரைப்பற்றி ஆறு பாடல்கள் உள்ளன. அவற்றுள் இவை: ஓடும் பொன்னும் ஒன்றெனவே உறுதி கண்ட உள்ளத்தான்; ஏடும் குருவும் இல்லாமல் யாவும் அறிந்த பேரறிஞன் ஈடில் அருள்மா முனிவன்பூரீ இராம கிருஷ்ணன் திருநாமம் நாடும் நகரும் போற்றிடயெந் நாளும் வாழ்க வாழ்கவே! (1) பார்தனிலே வேதாந்தப் பயிர்வ ளர்த்தோன் பத்தினியைச் சோதரியென் றெண்ணி வாழ்ந்தோன்; கூர்மதியால் எக்கலையும் தானே கற்றோன்; குணக்குன்றம் ராமகிருஷ்ண பரம ஹம்சன்; சீர்மிகுந்த மெய்ஞ்ஞானி தெரிந்து ரைத்த செம்மொழிகள் சிந்தையினிற் சேர்ந்தோர் என்றும் பேர்பெருக நீடிந்த உலகில் வாழ்ந்து பேரின்ப வாழ்வினையும் பெறுவர் மாதோ: (2) 8. ம.மா.: இராமகிருஷ்ணரின் தேவி பிரார்த்தனை