பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 12G * கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு பாரில்அரும் புகழ்படைத்த பரம ஹம்சன், பாரதத்தாய் செய்ததவப் பயனாய் வந்தோன்; நீரொழியப் பாலுண்ணும் நெறியில் ஆய்ந்து, நிலையான உண்மைகளை நெஞ்சிற் கொண்டோன்; கூரியமா மதிவிவே கானந் தற்குக் கோதிலா மெய்ஞ்ஞான குருவாய் நின்றோன்; சீரியநம் ராமகிருஷ்ண தேவன் பாதம் - சென்னிமிசைக் கொண்டுநிதம் சேவிப் போமே! (3) சாரதா தேவி: இராமகிருஷ்ணரின் துணைவியார். கன வரையும் மிஞ்சிய மனப்பக்குவம் அடைந்தவர். இவரைப் பற்றி இரண்டு பாடல்கள் உள்ளன. அவை: சிந்தனையில் போற்றிடுவோம்; செந்தமிழில் பாடிடுவோம் வந்தனைகள் செய்து வணங்கிடுவோம் - முந்துபுகழ்ப் பாரதத்தாய் பெற்றபெரும் பாக்கியத்தால் வந்துதித்த சாரதத்தாய் வாசமலர்த் தாள் (1) மண்ணில் வாழும் வாழ்நாளில் மாலை யிட்ட மணவாளன் கண்ணிற் கண்ட கடவுளெனக் கருதி வாழ்ந்த மாதேவி அண்ணல் ராம கிருஷ்ணாவின் அருமை மனைவி சாரதையை பண்ணில் பாடிப் புகழ்வோமே! பாத பூசை செய்வோமே (2) இங்ங்னம் அருளாளர் பெருமக்களைப் பாடிய கவிமணி யின் கவனத்தில் நந்தமிழ் நாட்டுத் தாயுமான அடிகளும் வள்ளல் இராமலிங்கப் பெருமானும் ஏன் இடம் பெற 9. ம.ம: சாரதாதேவி