பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-j- 122 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு என்பவை இரண்டாகும். ஐந்தும் அகத்தில் இடம் பெறத் தக்கவை. அரவிந்தர்': வங்க நாட்டில் தோன்றி சில ஆண்டுகள் நாட்டுத் தொண்டாற்றி, புதுவைப் போந்து புனித வாழ் வாம் சமய வாழ்வில் ஆசிரமம் கண்டு அணையா சோதியா கப் பல ஆண்டுகள் திகழ்ந்து அமைதியான வாழ்க்கை வாழ்ந்தவர். இன்றும் புதுவை செல்வோர் அரவிந்த ஆசிர மம் கானாது திரும்புவதில்லை. 1980இல் என் மனநிலை கலங்கியிருந்தது. நானும் என் துணைவியும் ஆசிரமவாசிக ளாகச் சேர்ந்து இம்மை வாழ்வை முடித்துக் கொள்ளத் திட்டமிட்டோம். எங்கள் நுகர்வினையின் (பிராரத்தம்) பலனாக அத்தகைய வாழ்வு அமையவில்லை! இந்த மாமுனிவரைப் பற்றி இரண்டே பாடல்கள்: ஐயம் அறவே நூற்கடலில் ஆழ்ந்து மூழ்கி ஆராய்ந்து பொய்யைப் போக்கி மெய்கண்ட புனிதன் புதுவை மாநகரில் தெய்வ ஞான தீபமெனத் திகழ்ந்த யோகி அரவிந்தன் வையம் காணாப் பேரின்ப வாழ்வு கண்டு மறைந்தனனே! (1) பீடாரும் வங்க வளநா டதனில் பிறந்துவந்து, நீடாழி மோது புதுவைப் பதியில் நிலைத்துநின்று, 12. மேலது. அணைந்த சோதி