பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர மூர்த்தி வழியில் 卡 135 卡 மிக்கவர். 'மிருச்ச கடிகம் என்ற வடமொழி நாடகத்தைத் தமிழாக்கம் செய்து மண்ணியல் சிறுதேர் என்ற தலைப்பில் வெளியிட்டுப் பெரும்புகழ் ஈட்டியவர். திருவாசகம், திருச் சதகம், நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை முதலிய வற்றிற்கு 'கதிர்மணி விளக்கம் கண்டவர். இவரை வாழ்த் தும் பாங்கில் ஏழு பாடல்களும் மகிழ்ச்சி உரை யாகப் பதினான்கு பாடல்களும், இரங்கற்பாக்களாக ஐந்து பாடல் களும் உள்ளன. வாழ்த்துப்பாக்கள்" பள்ளிப் படிப்பறியான் பைந்தமிழும் ஆரியமும் தெள்ளிச் சுவைதேரும் செந்நாவான் - உள்ளிநிதம் சித்தம் சிவன்பால் செலுத்தும் கதிரேசன் நித்தம் வளர்க நிலத்து (2) சிந்தைக் கினிய செவிக்கினிய திருவா சகத்தின் உட்பொருளை முந்தும் அறிவால் ஆராய்ந்து முத்தே வர்க்கும் முதற்றேவன் எந்தை சிவனே யாமென்ன எவர்க்கும் நன்றாய் எடுத்தோத வந்த பெரும்பே ராசிரியன் வாழ்க வாழ்க வாழ்கவே! (4) ஆரி யத்தின் நிலைகண்டோன், அரிய தமிழின் கடலானோன், பாரி அண்ணா மலைமன்னன் பரிந்து போற்றும் முதுபுலவன் தேரும் இனிய சொல்லால்எம் சிந்தை கவரும் கதிரேசன் பேரும் புகழும் பெருவாழ்வும் பெற்று நிதமும் வாழ்கவே! (6) 26. மேலது கதம்பம் - மகிழ்ச்சி உரை