பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 136 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு நெற்றி நிறைந்த நீறுடையான், நெஞ்சில் பஞ்சாக் கரமுடையான் முற்றி முதிரும் அன்பாலே மூவர் தமிழும் பயில்நாவான் சுற்றம் தழுவும் குணசீலன், தூய நெறிகண் டொழுகிடுவான் கற்ற பெரியோன் கதிரேசன் கடவு ளருளால் வாழியவே! (7) மகிழ்ச்சி உரை 空了 தெய்வ மறையாம் திருவா சகப்பொருளை ஐயமறக் காட்டும் அணிவிளக்கம் - வையமிசைச் செந்தமிழைக் கற்றுத் தெளிந்த கதிரேசன் தந்த மணிவிளக்கம் தான் (6) வாதவூர் மாமுனிவன் மனங்க னிந்து மக்க ளெல்லாம் சிவநெறிக்கண் டுய்யுமாறு கோதிலா தமைத்ததிரு வாச கப்பூங் கோயிலுக்குச் சிறந்தகதிர் மணிவிளக்கம் ஒதரிய பேரன்பால் உபயம் வைத்தோன் ஓங்குபுகழ்க் கதிரேச நண்பன் தில்லை ஆதிரையான் அழகியசிற் றம்ப லத்தான் அருளாலே நீடுழி வாழ்க மாதோ: (12) இரங்கற்பா" பத்தரெலாம் பாராட்டும் பண்டித மாமணிநீ அத்தன் திருவடிக்கா ளாயினையோ - நித்தமவர் கற்றுக் களிக்கும் கதிர்மணி நல்விளக்கம் முற்றுப் பெறுவதன் முன் (1) 27. ம.மா. கதிமணி விளக்கம் - மகிழ்ச்சி உரை 28. ம.ம. பண்டிதமணியின் பிரிவு