பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 38 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு இரங்கற்பா’ புன்னகை பூத்துப் பொலியும் முகத்தழகன் கன்னலைச் சொல்லில் கலந்தளிப்போன் - மன்னுடிகழ்ச் செந்தமிழ்ச் செல்வன் சிதம்பர நாதனைநான் எந்தநாள் காண்பேன் இனி! (2) தண்பொருநை நெல்லைத் தமிழர் குலதிலகன் நண்பன் சிதம்பர நாதனைப்போல் - பண்பமைந்த பாவின் நயமறிந்து பாவலரைப் பாராட்ட யாவருளர் ஐயா இனி? (4) என்னருமை நண்பா இனிய கலைரசிகா! தன்னிகர் இல்லாத் தமிழ்ச் செல்வா - மென்னுமுளம் தத்தளித்து நின்றுன் சரமகவி பாடுதற்கோ இத்தனைநாள் வாழ்ந்திருந்தேன் யான்? (5) அம்பொன் நகரில் அமர்ந்திடினும் அமுதே உணவாய் அருந்திடினும் கம்பன் கவியைப் பாடாமல் கன்னித் தமிழைப் பேசாமல் உம்பர் உலக வாழ்க்கையிலுன் உள்ளம் மகிழ்ச்சி கண்டிடுமோ? நம்பன் பாதம் மறவாத நண்பா ரசிக மாமணியே! (6) இவருடைய சுவைத் திறனைப் பற்றி" கூடி யிருக்கும் நண்பரெலாம் குடித்து மகிழ்ந்து கூத்தாட, 30. மேலது. முத்துக்குவியல் 31. ம.மா. கதம்பம் - காண்க