பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர மூர்த்தி வழியில் + 139 + பாடிப் பாடிப் பாடலிலே பாலும் தேனும் கலந்துதவும் தாடி இல்லாத் தாகூர்செய் ஜால வித்தை அத்தனையும் தேடி அழகாய்ச் சொன்னதமிழ்ச் செல்வா வாழ்க வாழ்கவே! என்று சொல்லிச் சொல்லி மகிழ்வார் கவிமணி. டி.கே.சி.யின் ஒரே மகன் தீர்த்தாரப்பன் (தீபன்) இவர்தம் அகால மரணம் டி.கே.சி.க்கு ஒரு பேரிடி. இவரைப் பற்றிக் கவிமணி, எப்பாலும் போற்றும் இசைத்தமிழ்ச் செல்வா:என் அப்பா! அழகியசெல் லையா!நான் - இப்பாரில் சிந்தைக் குளிரச் சிரித்தொளிரும் உன்முகத்தை எந்தநாள் காண்பேன் இனி என்ற பாடலில் இரங்குகின்றார். அபிநவ காளமேகம் அனந்த கிருஷ்ண அய்யங்கார்: 'விரைந்து கவிபாடும் வேந்த ராதலால் அபிநவ காளமே கம் என வழங்கப்படுகின்றார். இவர் சதாபிசேகம் பற்றி மூன்று பாடல்களும்” இரங்கற் பாவாக ஒரு பாடலும்” உள்ளன. முன்னைக் காள மேகத்தின் மூவி ரட்டிக் கவிபொழிவோன் அன்னை வாணி அருளுடையன் அனந்த கிருஷ்ணப் பேரறிஞன் 32. ம.மா. அபிநவ காளமேகம் - அ.கி, அய்யங்கார் 33. மேலது - மேலது - பிரிவு