பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 40 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு மன்னும் ஈசன் திருவருளால் மகிழ்ந்து மக்கள் சுற்றத்தோடு இன்னும் பிறைகள் ஆயிரம்கண்டு இனிது வாழ்க! வாழ்கவே! (1) ஆரியமும் செந்தமிழும் ஆராய்ந்து கற்றமகான் பாரிலிணை யில்லாத பண்டிதன் - சீரிய அந்தன சீலன் அனந்தகிருஷ்ண நண்பனையான் எந்தநாள் காண்பேன் இனி! 12. நாட்டு நற்றொண்டர்கள் இவர்களுள் கட்டபொம்மன், சரோஜினி தேவி, அன்னை கஸ்தூரிபாய், நேதாஜி, வ.உ.சி., நாமக்கல் கவிஞர், இராஜாஜி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். கட்டபொம்மன்' வீரபாண்டியக் கட்டபொம்மன். தென்பாண்டி நாட்டு எட்டயபுரத்தைச் சேர்ந்தவன். வெள் ளையர் ஆட்சிப் பிடிப்பிலிருந்து நாடு விடுதலை பெற வேண்டும் என்று முதல் முழக்கம் செய்த பெருமகன். இவனைப் பற்றிப் பதின்மூன்று பாடல்கள் உள்ளன. செந்தில் முருகன் சேவடியைத் தினமும் போற்றித் தொழுதிடுவோன்; சந்தக் கவிகேட் டுளமகிழ்ந்து தரளம் வாரி அளித்திடுவோன்; வந்த பொல்லா வெள்ளையரை மதியா வீர பாண்டியனைச் சிந்தை மறவா தோவியத்தில் சிலையில் கண்டு போற்றுவமே (2) 34. ம.மா. கதம்பம் காண்க