பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர மூர்த்தி வழியில் + 149 -} அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணை வேந்தராகத் திகழ்ந்தவர். இவரைப்பற்றி மணிவிழா வாழ்த்தாக ஐந்து பாடல்களும்". சரமகவியாக ஒரு பாடலும் உள்ளன. வாழ்த்து அண்ணா மலைமன் அமைத்த கலைக்கழகம் கண்ணார் மணிபோலக் காத்திடுவோன் - பண்ணார்ந்த செந்தமிழ்ச் செல்வன் திருக்கோவைச் சண்முகவேள் சந்ததம் வாழ்க தழைத்து (1) ஆங்கிலமும் செந்தமிழும் ஆய்ந்து கற்றோன்; அரியபொரு ளாதாரக் கலைஞா னத்தால், ஓங்குபுகழ் நிபுணனென உலகம் போற்றும் உத்தமனம் சண்முகவேள் நித்தம் நித்தம் தீங்கொழிய நல்லனவே தேர்ந்த றிந்து செய்வன வெலாம்திருந்தச் செய்தெம் ஈசன் தேங்கமழ்பூங் கொன்றையணிந் தாடும் தில்லைச் சிவபெருமான் திருவருளால் வாழ்க மாதோ (4) சரமகவி" மன்னாதி மன்னர் மதிக்கும் மதிப்புடையான்; பொன்னாடை வந்தெனக்குப் போர்த்தமகான் - தென்னாட்டுச் சிங்கவே றான திருக்கோவைச் சண்முகனை எங்கேதான் காண்பேன் இனி. சொ. முருகப்பா: செட்டி நாடு தமிழ் உலகிற்குத் தந்த சீர்திருத்தச் செம்மல். அமராவதிப் புதுரில் மகளிர் இல் லம் கண்ட மேதை. காந்தீயம், சைவ சித்தாந்தம் இவற் றில் ஆழங்கால் பட்டவர். அவர் வாக்கில் சொன்னால்: 42. ம.மா. ஆர்.கே. சண்முகம் செட்டியார் மணிவிழா வாழ்த்து 43. ம.ம: ஆர்.கே. சண்முகம் செட்டியார் பிரிவு