பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 150 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு வள்ளுவரைக் கற்றேன்; மணிவாசகம் உணர்ந்தேன்; கள்ளுறு கம்பன் கவிதையில் திளைத்தேன் - அள்ளுபுகழ் காந்தி யடிகளையென் கண்ணாரக் கண்டிட்டேன்; வாழ்ந்தேன் இருந்தேன்; மகிழ்ந்தேன். கம்பருக்கு அடிமையென்று கைச்சாத்து செய்துவிட்டேன்; இம்பர்வேறு ஒன்றற்கு இடமுண்டோ? - கம்பர்அரும் காதைக்கு உரைஎழுதக் காலம் மிகுந்திருந்தால் ஏதுவொன்று செய்ததற்கு இடம். இந்தப் பெரியாரிடம் அடியேனுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. இவர் மணிவிழா பற்றி மூன்று பாடல்களும்" இராமகாதை பதிப்பு பற்றி ஒரு பாடலும் உள்ளன. சொல்லும் சொல்லை ஐயமறச் சொல்லி உண்மை காத்திடுவோன்; அல்லும் பகலும் உழைத்திடுவோன்; அழகார் அமரா வதிமகளிர் இல்லம் கண்டு புகழ்கண்டோன்; எங்கள் நண்பன் முருகப்பன் வெல்லும் செந்திற் பன்னிருகை வேலன் அருளால் வாழ்கவே! (2) பத்திமிகுந் தன்பர் பணிந்துநிதம் போற்றுகின்ற அத்திமுகத் தண்ணல் அருளாலே - வித்தகன் சிந்தைக் கினியதமிழ்ச் செல்வன் முருகப்பன் சந்ததமும் வாழ்க தழைத்து, (3) 44. ம.ம. செ.முருகப்பா மணிவிழா வாழ்த்து