பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர மூர்த்தி வழியில் 米 i5篡 普 யாவரும் போற்ற இராம கதையிதனை ஆவலோடு தேர்ந்தளித்த அன்புடையோன் - மேவுதமிழ் வித்தகச் செல்வனெம் வீர முருகப்பன் நித்தமும் வாழ்க நிலைத்து" (1) வெ.ப. சுப்பிரமணிய முதலியார்". இவர் விலங்குக வின் உறுபிணி நீக்கும் துறையில் பணியாற்றியவர். தமிழில் நல்ல பயிற்சியுடையவர்; கவிபாடும் திறம் வாய்ந்தவர். இவர் கோம்பி விருத்தம்', சுவர்க்க நீக்கம் அகலிகை வெண்பா முதலிய கவிதை நூல்களை இயற்றிப் பெரும் புகழ் அடைந்தவர். அகலிகை வெண்பாவின் 'கடவுள் வாழ்த்து சிந்த னைக்கு விருந்தாக அமைந்துள்ளது. ஏத்திமத மெல்லாம் எதையறிந்தேம் என்னும்? எதைச் சாத்திரம்நன் காய்ந்து, சலிக்கும்? எதை - நாத்திகமோர் சற்றுமே ஓர்ந்திலதாச் சாதித் திடும்? அதையே பற்றுவாய் நெஞ்சே பரிந்து என்பதுவே அப்பாடல். இப்பெரியாரின் எண்பதாம் ஆண்டு நிறைவுபற்றி ஒரு பாடல் உள்ளது. எண்பதாண் டான இளைஞனே, இன்னமுதின் பண்பெலாம் காட்டுதமிழ்ப் பாவலனே - நண்பனே வெள்ளக்கால் செல்வனே, வேள்சுப் பிரமணிய வள்ளலே, வாழ்க மகிழ்ந்து என்ற பாடலாகும் அது. 45. இராம காதைப் பதிப்பு (1) 1954 - சனவரி நூல் வெளியீடு விழாவில் அடியேனும் பேசிப் பங்கு கொண்டேன். 46. ம.மா: வாழ்த்து காண்க.