பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-j- is2 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு சோம.லெ'. இவர் சொந்தச் செலவில் உலகம் சுற்றிய தமிழர். செட்டிநாடு தந்த தமிழ்ச் செல்வர். சுவைபட எழுதிய, செய்திகள் நிரம்பிய பன்னூல்களின் ஆசிரியர். விவசாய முதல் அமைச்சர் ஒமந்துர் இராசமாமி ரெட்டி யார் வரலாற்றை ஊர் ஊராகத் தேடிச் சென்று செய்திகளை அரும்பாடுபட்டுத் தேர்ந்தெடுத்துத் தொகுத்து எழுதிய தமிழ்ச் செம்மல். இவரைத் தமிழ் பாஸ்வெல் எனலாம். இவரைப் பற்றி வாழ்த்தாக ஒரு பாடல்: எல்லா நாடும் தன்நாடாய் எங்கும் சுற்றி ஆராய்ந்து நல்லார் பலரின் கருத்தையெலாம் நாளும் தேடித் தமிழ் மக்கள் பல்லார் அறியச் செந்தமிழில் பண்பாய் உரைக்கும் என்நண்பன் சொல்லால் அமுதை வென்றிடுவோன் சோம லக்கு மணன் வாழ்க! 6. கலைஞர்கள் கலைஞர்களில் இராவ் பகதூர் ப.சம்பந்த முதலியார், இசையரசு இலட்சுமண பிள்ளை, டி.கே.எஸ். சகோதரர் கள் ஆகியோர். பம்மல் சம்பந்த முதலியார் 19, 20ஆம் நூற்றாண்டுகளில் நாடக உலகில் துருவ மீன்போல் திகழ்ந்தவர். நூற்றுக்கு மேற்பட்ட நாடகங்களை அரங்கேற்றி நாடகக் கலையின் முன்னேற்றத்திற்காகப் பெருந்தொண்டு புரிந்தவர். நாடகக் 47. ம.மா. வாழ்த்து - சேமலெ வாழ்த்து