பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர மூர்த்தி வழியில் + 153 + கலையில் இருந்து வந்த இழிநிலையை மாற்றியமைத்த வர். சென்னையில் (1891) சுகுண விலாச சபா என்ற நாடகக் கழகத்தை ஏற்படுத்தி அதன் மூலம் இக்கலையைப் பரப்பி யவர். தாமும் நடித்து பல அறிஞர்களையம் நடிக்கச் செய்தவர். நீதிபதி முதலான பதவிகளில் இருந்த போதும் இவருடைய தொண்டு ஒயவில்லை. இரத்னாவளி’, 'மனோகரா, இரண்டு நண்பர்கள்', 'கள்வர் தலைவன்', வேதாள உலகம் முதலியவை இவருடைய படைப்புத் திறனை எடுத்துக்காட்டும் சிறந்த நாடகங்கள். இவர் எழுதியுள்ள நாடகத் தமிழ்', 'நாடக மேடை நினைவுகள் ஆகிய நூல்கள் நாடகத் துறையில் இவருக்கு இருந்த ஆர்வம், அதுபவம், பயிற்சி முதலியவற்றை விளக்குகின் றன. இத்தகைய பெரியாரின் எண்பதாம் ஆண்டு நிறைவு நாளை வாழ்த்தி கவிமணியின் இரண்டு பாடல்கள். *. அந்திமதி சூடி அம்பலத்தி லாடிநிதம் சிந்தைமகிழ் கூத்தன் திருவருளால் - செந்தமிழ் நாடுபுகழ் சம்பந்தன் நடிக மகராசன் நீடுலகில் வாழ்க நிலைத்து. (1) ஈடி லாத செந்தமிழில் இனிய தமிழில் அழகழகாய் நாடகங்கள் பலதந்த நடிக ராசன் சம்பந்தன் நீடிவ் உலகில் பல்லாண்டு நிலைத்து வாழ நல்லவரம் ஆடும் கூத்தன் எம்பெருமான் அருள்க அருள்க அருள்கவே (2) 48. ம.மா: வாழ்த்து - காண்க