பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 154 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு இசையரசு இலட்சுமண பிள்ளை நாடகத் துறையில் 'விழா நாடகம் இரவி வர்மா போன்ற நாடகங்களை இயற்றிப் புகழ்பெற்ற இப்பெருமான் இசைத் துறையிலும் புலமை மிக்கவராகத் திகழ்ந்தார். செய்யுட் கோவை' என்பது இவர் இயற்றிய பாடல்களின் தொகுதியாகும். இவர் மறைவு பற்றி மூன்று பாடல்கள் உள்ளன. 43 கந்தருவ நன்னகர்க்கோ? கண்ணுதல் சேவடிக்கோ? சந்தமெழு தண்பொதிகைச் சாரலுக்கோ? - முந்துதமிழ் இன்னிசை மன்னன் இலக்குமணன் ஏகினான் மன்னிலத் தெம்மை மறந்து (1) ஞானி வடலூர் வள்ளலையெந் நாளும் போற்றும் குணசீலன், தேனைப் பாலை இசையமுதைச் சோர்த்தின் கவிகள் செய்திடுவோன்; ஊனை உண்ணேல் உண்ணேல் என்று ஒதும் அறிஞன் இலக்குமணன் ஆன வயதெண் பத்தேழில் அமர வாழ்வை அடைந்தனனே! (3) டி.கே.எஸ். சகோதரர்கள்". இவர்கள் நாஞ்சில் நாட்டு நற்றமிழ்ப் புதல்வர்கள். இவர்தம் கலைக் குழுவினர்கள் நடத்திய ஒளவையார் நாடகம் கண்டுகளித்து உள்ளம் பொங்கி உவந்தளித்த வாழ்த்துப் பாக்கள் மூன்று உள்ளன. 49, ம.ம. சரமகவி - காண்க 50. ம.மா. கதம்பம் - ஒளவையார் நாடகம் காண்க