பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. சமூகநலச் சிந்தனைகள் மனிதன் ஒரு சமூகப் பிராணி. அவன் தனியாக வாழ முடியாது. நாம் உண்ணும் உணவு உற்பத்தியில் எத்தனை பேர் உழைக்கின்றனர்? உடுத்தும் உடை உற்பத்தியில் எத்தனை பேர் பங்கு பெறுகின்றனர்? மளிகைக் கடையில் வாங்கும் சாமான்களையும் விதவிதமாகத் துணிகள் விற் கும் துணிக் கடையில் பலவித துணிகளையும் எண்ணிப் பார்த்தால் இவ்வுண்மை விளங்காமற் போகாது. நாம் குடியிருக்கும் வீட்டைத்தான் எண்ணிப் பார்ப்போமே. வீடு கட்டும் வேலையில் பங்கு பெற்ற தொழிலாளர்கள் செங்கல், சீமைக்காரை, கருங்கல், பல வண்ணமமைந்த தரையில் பாவிய கல், பலகணி - வாயிற்படிக் கதவுகள் தயாரித்தல், சுவரில் பூச்சு வேலை செய்ய வேண்டிய வண்ணக் கலவைகள் முதலியவற்றைத் தயாரித்த தொழி லாளர்கள் இவர்களின் பங்கை எண்ணிப் பார்த்தால் மணி தன் தனியாக வாழ முடியாது என்ற உண்மை தெளிவாகும். இந்தப் பேருண்மையைக் கவிமணி, ஏகாந்தம் யாவருக்கும் இசைய மாட்டாது; எந்நாளும் கூடியே வாழ வேண்டும்; சாகாத வரம்பெற்றோர் எவரும் இல்லை; தளர்ந்தவரைத் தாங்குவதே தரும மமாகும், ! என்று கூறுவார். பாரதியாரும், ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - தம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே' 1. ம.ம: வையமும் வாழ்வும் வாழ்க்கை நிலையாமை - 2