பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 157 + என்று கூறியுள்ளதையும் ஈண்டுச் சிந்தித்தல் தகும். இனி, கவிமணியின் சமூக நலச் சிந்தனைகள் பற்றி ஆராய் வோம். ஒற்றுமை: சமூகம் சிறப்புடன் திகழ வேண்டுமானால் மக்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பது கவிமணி யின் திருக்குறிப்பு. மக்களிடை ஏற்றத் தாழ்வைக் கண்டு சிலர் உள்ளம் குமுறுகின்றனர். சீர்திருத்தவாதிகள் சமூகத் தின் அமைப்பை மாற்றியமைக்க முயலுகின்றனர். சட்டத் தின் மூலம் சில சில திருத்தங்களைக் கொணர்ந்து அதனை நடைமுடிைப்படுத்துகின்றது அரசு. பின்னிலையிலுள்ள வர்கட்கு கல்விச் சலுகை, உத்தியோகச் சலுகை முதலியன நல்கி ஊக்குவிக்கின்றது. என்ன செய்தாலும் மேலும் ஏற்றத் தாழ்வே இருந்து கொண்டுதான் உள்ளது. இதற்கு அறிஞர்கள், தத்துவ விற்பன்னர்கள் கூறும் காரணம், அவரவர்கள் பல பிறப்புகளிலும் செய்த வினைகளே காரணம் என்பது. இன்னும் சிலர் இறைவன்மீது பழியைப் போடுகின்றனர். இவற்றையெல்லாம் கருதி கவிமணி, வைய மெங்குமே - கானும் வாழ்வு தாழ்வெல்லாம் செய்வினைப் பயனாம் - இதில் சிறிதும் ஐயமில்லை (7) என்று கூறுவார்." ஒருவர் வாழ்ந்திடலும் - உலகில் ஒருவர் தாழ்ந்திடலும் அரிய தெய்வத்தின் - செயலென் றறைதல் வீணேயாம். (4) 2. பா.க. தே.கீ. வந்தே மாதரம் - 4 3. ம.மா. வையமும் வாழ்வும் - ஒத்துழைப்பு - காண்க