பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 58 米 கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு ஈசன் மீதிலே - பழியை ஏற்ற லேனையா நாச மாவதற்கு மூலம் நாமே தானையா: (6) என்று தெளிவுறுத்துவர். பாரத சமுதாயத்தில் ஒற்றுமையை நிலைநாட்ட முய லும் பாரதி, "எல்லா உயிர்களிலும் நானே இருக்கின்றேன் என்றுரைத் தான்கண்ண பெருமான்' என்று கீதையின் உண்மையை எடுத்துக்காட்டி, எல்லாரும் ஒர்குலம் எல்லாரும் ஓரினம் எல்லாரும் இந்திய மக்கள்" என்று மக்களில் வேறுபாடு இல்லை என்று உண்மையை உணர்த்துவார். ஒற்றுமையாக வாழவேண்டும் என்பது குறிப்பு. இதே கருத்தைக் கவிமணி வேறொரு போக்கில் மக்களுக்கு உணர்த்துவார் மேலே குறிப்பிட்ட பாடலில், உலகம் முழுவதும் - நோக்கின் ஒருடம் பேயாம் அலகில் சீவரெல்லாம் - அதின் அவயங்க ளேயாம் (8) உடலு றுப்புகள்போல் - உலகில் ஒத்துழைப் போமேல், 4. பா.க தே.கி. பாரத சமுதாயம்