பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமூகநலச் சிந்தனைகள் + 159 + தடையி லாமலே - சேமம் தழைத்து வருமையா (9) இப்படி வாழ்ந்தால் வறுமை அண்டாது; கொடிய வழக் கும் வாராது; சிறுமை தரும் செயல் ஏதும் தீண்ட மாட்டாது என்பது கவிமணி தரும் குறிப்பு. 'ஒற்றுமையே உயிர்நிலை என்ற கருத்தைப் பிறிதோர் இடத்திலும் வலியுறுத்துவார் கவிமணி." ஒற்றுமையாக உழைத்திடுவோம் - நாட்டில் உற்ற துணைவராய் வாழ்ந்திடுவோம்; வெற்றுரைபேசித் திரியவேண்டாம் - இன்னும் வீணாய்ப் புராணம் விரிக்கவேண்டாம் (i.) என்பது அவர் வழங்கும் அறவுரை. சாதி வேற்றுமை: இன்று நாடு முழுதும் ஒற்றுமை யின்மை நோயால் பீடிக்கப் பெற்றிருப்பதற்குச் சாதி வேற்றுமையே காரணம் என்பதை யாவரும் அறிவர். வேறுபட்ட சாதியர்களிடையே கொள்வினை - கொடுப்பி னை இல்லாவிடினும், நாடி எவரொடும் நட்பினராய்த் - தேச நன்மைக் குழைப்பதில் நஷ்டம் உண்டோ?" என்று கேட்கின்றார். மேலும், கீரியும் பாம்புமாய்ச் சண்டையிட்டு - சாதி கீழென்றும் மேலென்றும் நாட்டிவிட்டு பாரதத்தாய் பெற்ற மக்களென்று - நிதம் பல்லவி பாடிப் பயன்எதுவோ? (3) என்று கவலையுடன் வினவுகின்றார். 5. ம.மா. சமூகம் - ஒற்றுமையே உயிர்நிலை 6. மேலது - மேலது - (2)