பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

号、176 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு மாறுபா டில்லா உணவை மறுத்துண்ணின் ஊறுபா டில்லை உயிர்க்கு" என்று கூறியுள்ளதை ஈண்டு நினைத்தல் தகும். பசித்துப் புசி என்பது மக்கள் மொழி. இதனை வள்ளுவப் பெருந் தகை, அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்கத் துவரப் பசித்து (குறள் 944) என்று வற்புறுத்துவார். கவிமணியும், மட்டுக்கு மிஞ்சிடில், வானமுதும் - குணம் மாறி விடமாகிப் போகும் அம்மா! இட்டமுள்ள தோழித் தங்கமே! - நீஇதை என்றும் மறவா திருப்பாய், அம்மா! சுண்டப் பசித்துண்ணும் வேளையிலே - பழஞ் சோறும் சுவையமு தாகும், அம்மா! பண்டி நிறைந்தபின் உண்பவர்க்கு - நல்ல பாலும் கசப்பாகிப் போகும், அம்மா!' (9) என்பார். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பொன்மொழியையொட்டி எழுந்தது. இது. உழைப்பை வற்புறுத்தும் கவிமணி, (8) ஆளும் அரசன் ஆனாலும் ஆகும் வேலை செய்வானேல், நாளும் நாளும் பண்டிதர்கை நாடி பார்க்க வேண்டாமே." என்று முன்மொழிவார். இதனையே கும்மிப் பாட்டிலும், 30. குறள் - மருந்து - 5 31. சுகாதாரக் கும்மி - 8.9 32. உடல்நலம் பேணல் 4