பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 组80 米 கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு

பேசுகின்றார் கவிமணி - பதினோரு பாடல்களில். சிலவற் றைக் காண்போம். தங்குமிடம்: ஆல மரத்தின் நிழலிதுவே - நல்ல ஆயிரங் காலெழு மண்டபமாம்; சாலவே தங்கும் பறவையெலாம் - அதில் சங்கீதம் பாடிடும் பாடகராம் (1) பட்டப் பகலை இரவென் றழைத்திடும் பாழான சத்திரம் ஏதுக் கடா! கட்டிப் புளுகும் கதைகளைக் - கேட்டிந்தக் காதுபுண் ணானதும் கொஞ்சமோடா (4) உணவு: ஊர்களி லுள்ள உழவர்களே - நமக்கு ஒயா துழைத்திடும் ஊழியராம்; சாரும்.இவ் வீடுகள் யாவையுமே - உண்ணச் சாதம் சமைத்திடும் சாலைகளாம் (2) சண்டிக் குதிரைமேல் நொண்டித்துரை - செய்யும் சவ்வாரி போலும்இவ் வாழ்வதனில் உண்ட துடுத்ததை யன்றிநாம் - வேறெதும் உண்மையாய்க் கண்டதும் உண்டோ? அடா (6) உண்டு வயிறு நிறைந்துவிட்டால் - உடன் உள்ளக் கவலை ஒழிந்ததடா! மண்டை உடைத்து வழக்குகள் - பேசிநாம் வானாளை வீணாளாய்ப் போக்கோம் அடா (8)