பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தல் வேண்டும் என்ற மனப்பான்மையும் இவரிடம் உண் டாயிற்று. இந்த மனப்பான்மையும் இவருடைய பண்பாட் டுணர்ச்சிக்கு உரம் அளித்தது. இறையன்பு: கவிமணி இயல்பாகவே இறையன்புடை யவராக இருந்தார். திருநெல்வேலியில் வாழ்ந்து வந்த உமையொரு பாக தேசிகர் என்பவரிடம் சிவதீட்சையும் பெற்றார். இவ்வாறு தீட்சை பெற்றபோது இவர் அவர் மீது பாடிய பாடலை நினைவு கூரலாம். வேறும் ஒருதுணையான் வேண்டுவனோ? வேணுவனம் தேறும் உமையோர்பாகத் தேசிகனே! - எனக்கு எய்யாப் பிறவி இருள்அகல நீஅளித்த பொய்யா விளக்கிருக்கும் போது" தாம் பிறந்த ஊராகிய தேரூரில் கோயில் கொண்டு எழுந் தருளியிருக்கும் அழகம்மையின் மீது அழகம்மை ஆசிரிய விருத்தம் (10 பாடல்கள்) என்னும் பதிகத்தையும் அடுத் துள்ள சுசீந்திரத்தில் எழுந்தருளியுள்ள தாணுமாலயப் பெரு மாள் மீதும் பல தோத்திரங்களையும் துதிப் பாடல்களை யும் இயற்றியுள்ளார். இங்ங்னம் இவர்தம் சமயப் பற்றும் இவருடைய பண்பாட்டுணர்ச்சியை மிகமிக ஆழந்ததாக்கு வதற்குக் காரணமாக அமைந்தது. இவ்வுணர்ச்சியின் விளைவாக இவர் மூலம் கலைமகள் துதி', 'இலக்குமி துதி”, “செந்தில் குமரன்', 'முருகன் புகழ் மாலை முதலிய பக்திப் பாடல்கள் பிறந்தன. பண்டைய இலட்சியங்கள் பலவழிகளாலும் உரம் பெற்று வளர்ந்த பண்பாட்டுணர்ச்சிமிக்க இவர்தம் உள் ளம் நமது மூதாதையர்களின் பண்டைய இலட்சியங்கள் 4. ம.ம: வாழ்த்து - உமையொருபாகக் குருக்கள் 5. மேலது - பக்தி மஞ்சரி காண்க.