பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. பண்பாட்டுக் கூறுகள் 'பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல்' என்றார் நல்லந்துவனார். மக்கட்கு உரிய பண்பு இல்லாதவர்கள் மரம் போன்றவர்கள் என்பர் வள்ளுவப் பெருந்தகை." மக்கட் பண்பு என்றால் என்ன? நீதியையும் அறத்தையும் விரும்பும் தன்மை ஆகும். இவற்றை விரும்புகின்றவர் களே உலகத்திற்குப் பயன்படுவார்கள். இவர்களுடைய பண்டையே உலகமும் பாராட்டும். இத்தகையோர் இருப்ப தனால்தான் உலக வாழ்க்கை உண்டு என்று சொல்லக் கூடியதாய் நடைபெறுகின்றது. பண்புடையார் பட்டுண்டு உலகம்' என்பது வள்ளுவர் வாழ்மொழி. உண்மையான பெருமையையுடைய உலகமாகத் தோன்றச் செய்வது நெஞ்சப் பண்பு ஒன்றேயாகும். பண்புடையவர்கள் பகை வர்களிடத்திலும் பண்போடு நடப்பதைக் காணலாம். தீங்கு செய்து வாழும் மற்றவர்களிடத்திலும் அவர்கள் பண்பு தவறாமல் நடப்பார்கள். இத்தகைய பண்பாட்டுனர்ச்சியைக் கவிமணியின் பாடல்களில் பளிச்சிடுவதைக் காணலாம். இயல்பாக இவ ரிடம் அமைந்த பண்பு, வாழ்ந்த சூழ்நிலை, பெற்ற கல்வி முறை முதலியவை இவருடைய பண்பாட்டுணர்ச்சியை வளர்த்தன. இதனால் இவருடைய பாடல்களும் பண்பாட் டுணர்ச்சியைப் பிரதிபலிப்பனவாய் அமைந்தன என்று கருதுவதில் தவறொன்றும் இல்லை. அறிவியலில் மிகவும் ஆழங்கால்பட்டிருந்தமையால், அதில் பெற்ற பயிற்சி யினால், எப்பொருளையும் அறிவியல் முறையில் நோக்கு 1. கலி (நெய்தல்) - 133 2. குறள் - 997 3. மேலது 996