* 4 + கவிமணியின் தமிழ்ப்பணி ஒரு மதிப்பீடு பின்ளை என்றவரின் திருமுகளார். மூத்த பிள்ளை என்பார் தமிழ்ப் புலவராகத் திகழ்ந்தவர்; கவிதைகள் இயற்றும் புலமை மிக்கவர். ஆதிலட்சுமி அம்மாள் பிறந்த இடம் திருதாகை என வழங்கும் நாகப்பட்டினம். அங்கு அவர் தாய்விட்டார் புகழ் மிக்க வணிகர்கள்; சொந்தக் கப்பல் வைத்து கடல் வாணிகம் நடத்தி வந்தனர். பிற்காலத்தில் பொருள் இழப்பு ஏற்பட்டதனால் வாணிகத்தைத் துறந்து தாஞ்சில் நாட்டில் குடியேறி விட்டார்கள். கல்வி: தொடக்க நிலைக் கல்வியைத் தேரூரில் உள்ள பாடசாலைகளில் இளமை முதற்கொண்டே தமிழும் மலை யாளமும் பயின்றார். தாய்மொழியாகிய தமிழ் மொழியின் மீது அளவற்ற பற்றுடையவராகத் திகழ்ந்தார். இளமை முதற் கொண்டே தமிழ்க் கவிதைகள் இயற்றுவதில் ஆர் வங் காட்டி வந்தார். தமிழ் நூல்களை முறையாகக் கற்க வேண்டும் என்ற பேரவா இவர் தம் மனத்தை உந்திக் கொண்டே இருந்தது. தேரூரின் அருகில் உள்ள 'வாணன் திட்டு மடத்தில் தங்கியிருந்த திருவாவடுதுறை ஆதீனம் தவத்திகு சாத்தலிங்கத் தம்பிரானவர்களிடம் தமிழ் இலக் கண இலக்கியங்களை ஐந்தாறு ஆண்டுக் காலம் முறையா கப் பாடம் கேட்டு ஆர்வத்துடன் பயின்றார். திருநெல் வேலி உமையொருபாக குருக்களிடம் சிவதீட்சையும் பெற் துக் கொண்டார். கோட்டாற்றிலுள்ள அரசாங்க ஆங்கிலக் கல்லூரியில் பயின்று மெட்ரிக்குலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். அதன் பின்னர் நாகர்கோவிலுள்ள கல்லூரியில் எப்ஃஏ வகுப்பில் சேர்ந்து பயின்றார். பல இடையூறுகளால் ஆங் கில கல்வியை நிறுத்திவிட வேண்டியதாயிற்று. எனினும் ஆங்கில நூல்களையும், ஆங்கிலக் கவிதைகளையும் எப் பொழுதும் படித்து வந்தார். இதன் பின்னர் திருவனந்த புரம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சில காலம் பயின்று பயிற்சிக்குரிய தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/20
தோற்றம்