பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிமணி - ஓர் அறிமுகம் + 5 卡 ஆசிரியத் தொழில்: கல்வித் துறை வாழ்க்கையே தமக் குரியது என்று மேற்கொண்டார். முதலில் கோட்டாற்றி லுள்ள நடுநிலைப் பள்ளியில் துணையாசிரியராகப் பணி யில் அமர்ந்தார் (1901ஆம் ஆண்டு ஐப்பசித் திங்கள்). பின்னர் நாகர்கோயில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலும், திருவனந்தபுரம் மகளிர் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியிலும் துணையாசிரியராகப் பணி ஏற்றார். அடுத்து, திருவனந்த புரம் அரசர் மகளிர் உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியராக வும் இறுதியாக அரசர் மகளிர் கல்லூரித் தமிழ் விரிவுரை யாளராகவும் பல்லாண்டுகள் பணியாற்றினார். அறிவியல் துறையில் நல்ல அறிவு பெற்றிருந்தமை யால் அப்பாடம் பற்றிய பயிற்சிப் பாடங்களைக் கற்பிப்ப தில் சிறந்த ஆசிரியராகத் திகழ்ந்தார். ஆனால், இலக்கியக் கல்வியை மறவாது ஒருபொழுதும் விடாது இலக்கியங்க ளைக் கற்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் காலத்தைச் செலவிட்டார். இறுதிக் காலத்தில் அரசர் மகளிர்ப் பள்ளி யில் தமிழாசிரியராகவும், அரசர் மகளிர்க் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்ற வாய்ப்புகள் கிடைத்த போது, தமது உயிராசைக்குரிய தமிழையே தாம் கற்பிக்கும் வாய்ப்புகள் நேர்ந்தது பற்றிக் கவிமணி பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார். இறுதியாக 1931ஆம் ஆண்டில் மனநிறைவு டன் ஆசிரியப் பணியினின்றும் ஒய்வு பெற்றார். எழுத்துப் பணி: தவத்திரு சாந்தலிங்கத் தம்பிரானவர்க ளிடம் தமிழ் பயின்று வரும்போதே கவிதை இயற்றும் ஆற்றல் முகிழ்க்கத் தொடங்கியது. அப்பெரியாரின் கட்ட ளைப்படி தம் சொந்த ஊராகிய தேரூரில் கோயில் கொண்டி ருக்கும் அழகம்மையின்மீது அழகம்மை ஆசிரிய விருத்தம் (பத்துப் பாடல்கள் அடங்கியது) என்ற கவிதை நூலையும் அடுத்துள்ள சுசீந்திரத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியி ருக்கும் தாணுமாலயப் பெருமாள்மீது பல தோத்திரங்களை யும் துதிப் பாடல்களையும் இயற்றினார். சுசீந்திர மாலை