பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு விண் கையெழுத்துப் படி ஆசிரியரிடமிருந்து தவறிப் போய் விட்டது. தினைவிலிருந்த ஒரு பாடல் மட்டும் 'மலரும் கலையும் நூலில் இடம் பெற்றுள்ளது. இவை இவர்தம் கன்னிப் படைப்புகளாக அமைந்தன. கவிதை இயற்றும் பண்பு கருவிலே திருவடையதாக அமைந்திருந்தது என் பதை அக்காலத் தமிழ் உலகம் நன்கு அறிந்தது. இவர்தம் ஆசிரியப் பணிக் காலத்தில் செய்யுட்களைப் புதியனவாக இயற்றும் பணி இவருடைய அன்றாட வாழ்க் கையில் நடைபெற்று வந்தது. கல்லூரி வாழ்க்கையில் இவருடைய கவித்துவம் வெளியாதற்குரிய வாய்ப்புகளும் அடிக்கடி நேர்த்தன. இவர் இயற்றிய கவிதைகள் கல்வித் துறை அதிகாரிகளாலும், பல அறிஞர்களாலும் தமிழ் விற்பன்னர்களாலும் பெரிதும் பாராட்டப் பெற்று வந்தன. பல சந்தர்ப்பங்களில் பாடப் பெற்ற தனிப் பாடல்கள் {வாழ்த்துப் பாடல்கள், சரம கவிகள் ) பிற்காலத்தில் வெளிவந்த மலரும் மாலையும் பதிப்பில் இடம் பெற்றுள் னை. தமிழ்நாட்டு இதழ்களில் ஆண்டான் கவிராயர், தேவன், ஐயம் பிள்ளை', 'குயில் என்ற புனை பெயர்க வில் பல பாடல்கள் வெளியாயின. இவரை அறிந்தோரெல் லாம் இவரிடம் பெருமதிப்புக் கொண்டிருந்தனர். இவரு டைய கல்வி அறிவு, தமிழ்ப் புலமை, கற்பிக்கும் ஆற்றல், கவிதை இயற்றும் திறன், நேர்மை, பண்பாடு முதலிய பல இனிய குணங்கள் பற்றித் திருவிதாங்கூர் பெருமக்கள் தன்கு உணர்ந்து இவரைப் போற்றி வரலாயினர். சுருங்கக் கூறின் அக்காலத் தமிழ்ச் சமூகம் இவரிடம் பெருமதிப்பு கொண்டிருந்தது. எழுத்து வடிவங்கள். திருவனந்தபுரத்திலிருந்து பண்டித முத்துசாமிப் பிள்ளையை ஆசிரியராகக் கொண்டு வெளி வத்த "தமிழன்" என்ற இதழிலும், "கேரள சொசைட்டி பேப்பர் முதலிய இதழ்களிலும் இவருடைய பாடல்களும் ஆய்வுரைகளும் வெளிவந்து கொண்டிருந்தன. 'மருமக்கள்