பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிமணி - ஓர் அறிமுகம் + 7 + மான்மியம் என்ற நகைச்சுவை நூல் பகுதிப் பகுதியாக தமிழனில் வரத் தொடங்கியது. யதார்த்தவாதி' என்ற புனை பெயரில் 'நாஞ்சி நேசன் என்ற இதழில் பல தமிழ்க் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். மதுரைத் தமிழ்ச் சங்கத் திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘செந்தமிழ் என்ற திங்கள் இதழிலும் இவரது கவிதைகளில் சில வெளிவந் தன. இவை தவிர, 'மலரும் மாலையும் (கவிதைத் தொகுதி) என்ற கவிதை நூலைக் காரைக்குடி புதுமைப் பதிப்பகம்’ என்ற நிறுவனம் வெளியிட்டது (1938). ஆசிய சோதி' என்ற நூலும் இப்பதிப்பகமே வெளியிட்டது (1941). இதே ஆண்டில் இப்பதிப்பகம் 'இளந்தென்றல்' என்ற தலைப்பில் குழந்தைப் பாடல்களை வெளியிட்டது. நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் என்ற நூலும் இப்பதிப்பகத்தின் மூலம் அச்சு வடிவம் பெற்றது (1942), தேவியின் கனிகள் என்ற தலைப்பில் திருவல்லிக்கேணி ஸ்டார் பிரசுரம் வெளியிட்டது (1945). இதில் 'மலரும் மாலை'யில் வெளி வந்துள்ள சரசுவதி துதி, குழந்தை', 'தாலாட்டு', 'கிளி", 'பசுவும் கன்றும்', 'சந்திரன்', 'முத்தம் தா என்னும் ஏழு கவிதைகள் அடங்கியிருந்தன. உமர்க்கய்யாம் என்ற நூலை கவிக்குயில் வெளியீடு மூலம் வெளிவந்தது (1945). 'காதல் பிறந்த கதை' (கவிதைத் தொகுதி) அருள் நிலைய வெளியீ டாக வெளிவந்தது (1947), தேவியின் கீர்த்தனங்கள் என்ற நூல் பாரி நிலையம் வெளியிட்டது (1953). இந்தப் பதிப்ப கம் கவிமணியின் உரைமணிகள் என்ற வசன இலக்கியத்தை யும் வெளியிட்டது (1953). 1951 முதல் கவிமணியின் (1) மலரும் மாலையும்", (2) நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் (3) 'உமார்கய்யாம்' (4) 'ஆசிய சோதி (5) தேவியின் கீர்த்த னங்கள் முதலியவற்றைப் பாரி நிலையத்தார் பதிப்புரிமை பெற்று வெளியிட்டு வருகின்றனர்.