பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பாட்டுக் கூறுகள் + 185 + இங்ங்னம் பல பெரியார்களைப் பற்றிப் பேசி பண்பாட் டுணர்ச்சியைத் தம் கவிதைகளில் பாயவிடும் கவிமணியின் கவனத்திலிருந்து தாயுமான அடிகள், வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகள் ஏன் தப்பினர் என்பது அறியக் கூடவில்லை. இவர்கள் மனிதநேய ஒருமைப்பாட்டின் தூண்களன்றோ? இயற்கை: இயற்கையைப்பற்றி இவர் இயற்றிய பாடல் கள் பண்பாட்டுணர்ச்சியைப் பளிச்சிடுவதாய் அமைந்துள் ளன. மேல்நாட்டுக் கவிஞர்களாகிய வொர்ட்ஸ்வொர்த், டென்னிசன் போன்றவர்களின் இயற்கையைப் பற்றிப் பாடிய பாடல்களைச் சுவைத் திறனாய்வாளர்கள் அவற் றைப் பலபடியாகப் புகழ்வதைக் காண்கின்றோம். சைவ சமய குரவர்களாகிய சம்பந்தர், நாவுக்கரசர், தம்பிரான் தோழர் இவர்கள் பாடல்களிலும், ஆழ்வார் பெருமக்கள் அருளியுள்ள பாசுரங்களிலும் இயற்கைப் பற்றிய வருண னைகளைக் கண்டு மகிழலாம். எடுத்துக்காட்டாக ஞானசம் பந்தர் தேவாரத்தில் ஒரு பாடல்: புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந் ஐம்மேல் உந்தி அலமந்த போதாக அஞ்சேல்என் றருள்செய்வான் அமரும் கோயில் வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென் றஞ்சி சிலமந்தி அலமந்து மரமேறி முகில்பார்க்கும் திருவை யாறே" Fi i ட்டு 8. சம்பந்தர் தேவாரம் 1.130:1