பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 186 + கவிமணியின் தமிழ்ப்பணி ஒரு மதிப்பீடு இப்பதிகத்தின் பாடல்கள் அனைத்தின் ஈற்றடிகள் இரண்டி லும் திருவையாற்றின் இயற்கைச் சூழல் அற்புதமாகக் காட்டப் பெறுகின்றது. திருமங்கையாழ்வாரின் திருக்கோவலூர் பற்றிய திரு மொழியில்’ அத்தலத்து இயற்கைச் சூழல் அழகுற அமைந் திருப்பதைக் கண்டு மகிழலாம். எழுந்தமலர்க் கருநீலம் இருந்தில் காட்ட இரும்புன்னை முத்தரும்பிச் செம்பொன் காட்ட செழுந்தட நீர்க்கமலம் தீவிகைபோல் காட்டும் திருக்கோவலூர் (3) என்றும், கோங்கரும்பும் சுரபுன்னை குரவுஆர் சோலைக் குழாம்வரிவண்டு இசைபாடும் பாடல் கேட்டுத் தீங்கரும்பு கண்வளரும் திருக்கோவலூர் (4) என்றும், கருங்கமுகு பசும்பாளை வெண்முத்து ஈன்று காய்எல்லாம் மரகதமாய்ப் பவளம் காட்ட, செருந்திமிக மொட்டலர்த்தும் தேன்கொள் சோலைத் திருக்கோவலூர் (7) என்றும் திருக்கோவலூர் பற்றிய பாசுரங்களில் இவ்வளம் சித்திரிக் கப் பெற்றிருப்பதைக் காண்க. நம்மாழ்வார் இயற்கையில் இறைவனையே கண்டு மகிழ்வார். 9. பெரி.திரு.2.10