பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பாட்டுக் கூறுகள் + 量8了 + பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற காவி மலர்என்றும் காண்தோறும் - பாவியேன் மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை எல்லாம் பிரான்உருவே என்று ' என்ற பாசுரத்தில் அப்பெருமான் இறைவனைக் கண்டு மகிழ்வதைக் காண்க. கவிமணியின் பாடல்களில் புல்பேசும்; அது தன் னைப் 'பசும்புல்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டு தன் சுயசரிதையைக் கூறுகின்றது." மலர்கள் திருவாய் மலர் கின்றன. பூமகளின் புன்னகைபோல் பூத்திடு வோமே! - கம்பன் பாமணக்கும் தமிழினைப்போல் பரமளிப்போமே!’ என்பதில் இதனைக் காணலாம். மலையை நோக்கி அணில் பேசுகின்றது." சூரியகாந்தியை நோக்கிக் கவிஞர் பேசு கின்றார். காயும் கதிரவன் மேனியை நோக்க - உன் கண்களும் கூசிக் கலங்காவோ! நேயம் மிகுந்தவர் காய வருத்தம் நிலைப்பதும் இல்லையே? சொல், அடியே!” என்ற பாடலில் இதனைக் காணலாம். கடலை நோக்கிக் கவிஞர் பேசுகின்றார். இங்கெல்லாம் பண்பாட்டுணர்வு கள் பளிச்சிடுகின்றன. 10. பெரி.திருவந்,73 11. ம.மா. வையமும் வாழ்வும் - புல் 12. மேலது. இயற்கை இன்பம் - மலர்கள் - 1 - 1 13. ம.மா. வையமும் வாழ்வும் - மலையும் அணிலும் 14. மேலது - இயற்கை இன்பம் - சூரியகாந்தி - 3