பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 188 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு இறைவனின் இருப்பு: அங்கிங்கெனாதபடி எங்கும் பிர காசமாய் ஆனந்தபூர்த்தியுடன் இறைவனின் இருப்பைக் காட்டுவது இந்தியப் பண்பாட்டின் அடிநிலைக் கொள்கை. இதனைச் சமயநூல்கள் வியாபகத்துவம் என்று பேசும். அவன் அணுவுக்கு அணுவாயும் எல்லாப் பொருள்களுள் ளும் இயங்கு திணை நிலைத்திணை அனைத்திலும் உறைகின்றான் என்றும் அவை பேசும். இதனை அந்தர் யாமித்துவம் என்று அவை குறிப்பிடும். இக்கொள்கை களைக் கம்பநாடன், வானின்று இழிந்து வரம்கந்து மாபூ தத்தின் வைப்பெங்கும் ஊனும் உயிரும் உணர்வும்போல் உள்ளும் புறமும் உளன்என்ப" என்று விளக்கி வைப்பான். இந்த அடிநிலைக் கொள் கைக்கு ஏற்பக் கவிமணியும் கிளி முதலிய பறவைகளைக் குறித்தும், உரோஜா முதலிய செடிகளைக் குறித்தும், மழலை மொழி பேசும் குழந்தைகளைக் குறித்தும் பாடிய பாடல்களில் பண்பாட்டுணர்ச்சியின் பெருமை பளிச்சிடு கின்றது. கிளியைக் குறித்து, செம்பவள வாயைத் திறந்துநீ செப்பும் மொழி கேட்கில் உம்பர் அமுதமெல்லாம் - செவியகத்து ஒடி ஒழுகும் அடி (13) கொம்பிற் கொலுவிருந்து - களித்துநீ கூவும் குரல்வருமேல் டம்பி யெழுஞ்சோலை - எனக்குப் பரமபதம் அடியோ! (14) 15. கம்பரா. அயோ.காண் - கடவுள் வாழ்த்து