பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-j- 190 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு தாயை விடு பேற்றை வற்புறுத்தி அதற்கு ஆபாயமாகிய துறவைக் கூறுதல் வள்ளுவர், சமண முனிவர் முதலியோ ரது கருத்தாகும். வேறு சில ஆசிரியர்கள், குறிப்பாக அகத்துறைப் புலவர்கள் யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை என்ற இரண்டனையும் குறிப்பிட்டு இல்லற இன்பத்தைக் காலம் தாழ்த்தாமல் நுகரவேண்டும் என்று வற்புறுத்தினர். கலித்தொகையாசிரியர், இளமையும் காமமும் நின்பாணி நில்லா 18 எனவும், இளமையும் காமமும் ஒராங்குப் பெற்றார் ஒரோவகை தம்முள் தழீஇ ஒரே ஒகை ஒன்றன்கூ றாடை உடுப்பவரே யாயினும் ஒன்றினர் வாழ்க்கையை வாழ்க்கை அரிதரோ சென்ற இளமை தாற்கு" என்று கூறுவர். இந்த இரண்டாவது வகை ஆசிரியர்களின் கருத்தைப் பெரும்பாலும் உட்கொண்டதே உமர்க்கய்யாம் பாடல் மலர்ந்து நல்ல மனம்வீசி வையம் புகழ வாழாமல் உலர்ந்து வீழும் அரும்புகளில் உலகில் யாரே எண்ணிடுவார்? கலந்த திருவும் யெளவனமும் கண்ணுக் கினிய மெய்யழகும் குலைந்து போகும் மெய்யறிஞர் கூறும் கூற்றில் ஐயமுண்டோ? (5) 18. கலித் பாலைக்கலி - 11 19. மேலது - 11