பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பாட்டுக் கூறுகள் 13 -- பலநூல் கற்ற பண்டிதர்கள் பலரும் சபையில் பலகடிக் கலகம் வாதம் செய்திடுக; கண்டம் கிழிய முழங்கிடுக; மலரும் மலர்கள் வாடலும்இவ் வாழ்வு நிலையா தோடலுமே உலகம் கண்ட உண்மைகளாம்; உண்டோ மற்றொன் றுடைத்திடவே? (6) உண்ட வெறியில் முன்னொரு நாள் உண்ட கலத்தை உடைத்தெறிந்தேன்; துண்டு துண்டாய்ப் போனகலம் துணிந்து மெல்ல எனைநோக்கிப் “பண்டு யானும் உன்வாழ்வைப் பாரில் அடைந்தேன்; நீயும்எனக்கு அண்டும் அந்த வாழ்வைஇனி அடைவாய் உண்மை என்றதடா (39)* என்ற பாடல்கள் சான்றுகளாகும். இன்னும் பிறிதோரிடத் தில், ஏகாந்தம் யாவருக்கும் இசைய மாட்டாது; எந்நாளும் கூடியே வாழ வேண்டும்: சாகாத வரம்பெற்றோர் எவரும் இல்லை; தளர்ந்தவரைத் தாங்குவதே தரும மாகும்; 20. உமர்க்கய்யாம் பாடல்கள் - 5.6.39.