பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 204 * கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு “எங்கள் ஒட்டமோ சொல்லி முடியாது. மேடு பள்ளங் களிலும் வெயில் மழை என்று பாராமலும் காடு மேடு என்று கருதாமலும் ஒடவேண்டிய நிலை. கால் இளைப்பா றக் கூட முடியாத நிலை. கெளவிப் புல்லையும் திண்ண விடுவதில்லை. மூலை முடுக்கெல்லாம் ஒட வேண்டிய நிலை." மேடு பள்ளங்களில் ஓடவேண்டும் - வெய்ய வேனில் மழைகளில் ஓடவேண்டும்; காடு செடிகளில் ஓடவேண்டும் - இந்தக் கஷ்டங்கள் யாரிடம் சொல்வோம்,ஐயோ! (15) கால்,இளைப் பாறியே நிற்கவொட்டீர் - வாயிற் கெளவிய புல்லையும் தின்னவொட்டீர்; மூலை முடுக்கென்றும் எண்ணமாட்டீர் - எம்மை மூச்சு விடாமல் துரத்துவீரே (18) மோட்டார் வண்டி வந்தும் கோடி கோடி மிதி வண்டி கள் வந்தும், மிதி வண்டிகள் போல் எண்ணெய் ஆற்றலால் இயங்கும் இரண்டு சக்கரங்கள் மூன்று சக்கர வண்டிகள் வந்தும் குதிரைகளை விட்டபாடில்லை. மோட்டார் வண்டிவந்தும் மோட்சமில்லை - நாங்கள் முன்செய்த தீவினைக் கென்செய்குவோம்? ஏட்டால் எழுத அடங்கிடுமா? - கஷ்டம் யாரிடம் சொல்லி அழுதிடுவோம்? (13) கோடிகோடி சைக்கிள் வந்திடினும் - எங்கள் கூட்டத்துக் கேதுமோர் நன்மையுண்டோ? ஒடிஓடி உயிர் ஓய்ந்திடவோ - எம்மை உண்டாக்கி விட்டான் உடையவனே? (1.4) குதிரையைப் பராமரிப்பவன் சிறிது கொள்ளு வேக வைத்து உணவாகத் தருகின்றான். சிறிது புல் போடுகின்