பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்பண்புக் கோட்பாடு 米 205 景 றான். சில சமயம் குளிப்பாட்டவும் செய்கின்றான். ஆனால், ஈடுபடுத்தும் வேலைகளோ அளவற்றவை. ஆழக்குக் காணம் அளித்திடுவீர் அதற்கு ஆயிரம் வேலையும் இட்டிடுவீர்; ஏழைக் கிரங்கெனும் நீதிமொழி - நீங்கள் ஏட்டில் படித்ததை ஏன்மறந்தீர்? (19) 'ஏழைக் கிரங்கவே வேண்டும் என்ற நீதிமொழியை ஏன் மறந்தீர்? என்று கேட்டு, சித்தம் இரங்கிட வேண்டுகின்றோம் - எம்மை சேமமாய்க் காத்திடக் கெஞ்சுகின்றோம்; புத்த முனியருள் போதனையை - என்றும் போற்றுதல் உங்கள் கடனாகுமே (20) என்று வேண்டுகோள் விடுத்து அறிவுரையும் தருகின்றன. குதிரைகள் புலம்பல் பற்றிய பாடல்கள் அற்புதமாய் அமைந்திருப்பதால் அனைத்துமே ஈண்டு காட்டி விளக்கப் பெற்றன. கவிமணியின் மக்கட் பண்பு பேணும் தன்மை இவற்றால் அற்புதமாக வெளிப்படுகின்றது அல்லவா? இடையூறுகளைக் களைதல்: மக்கட்பண்பு மேலும் பாட் டிற்குப் பகையாய் நின்று இடையூறு விளைவித்து வரும் சமுதாய ஒழுக்கங்களைப் பெரிதும் இகழ்ந்து வெறுப்பதை யும் இவருடைய பாடல்களில் காண முடிகின்றது. இஃது இவர்தம் நன்னோக்கத்திற்குப் பொருத்தமானதே. இவர் இயற்றிய 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழிமான்மியம் இதற் குத் தக்கதொரு சான்றாக அமைகின்றது. நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி வேளாளர் குலத்தில் பிறந்த பெண்ணொ ருத்தி தன் வாழ்நாளில் அதுபவித்த சிரமங்களையெல்லாம் எடுத்துக் கூறி வருந்துவதாக அமைந்த ஒரு சமுதாயச் சித்திரமாகும்; இஃது ஒரு நூதனமான இலக்கிய வகையுமா