பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 206 卡 கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு கும். இதில் நகைச்சுவையும் இகழ்ச்சியும் சோகமும் கலந்துவரும் பெரியதொரு பயனும் விளைவதாக அமை கின்றது. இந்நூலில் மருமக்கள் வழியைக் குறித்து வரும் பகுதி ஒரு சிறந்த சமூகம் படிப்பினையைக் காட்டுவதாகும். தீரா வழக்கும் சென்மப் பகையும் உற்றா ருக்குள் உண்டாக் கும்வழி, அப்பனைப் பிள்ளை அண்டவொட் டாவழி, பிள்ளையை அப்பன் பேனவொட் டாவழி; கணவனை மனைவி போற்றவொட் டாவழி, மனைவியைக் கணவன் மதிக்கவொட் டாவழி, அண்ணனைத் தம்பி அடுக்கவொட் டாவழி, தம்பியை அண்ணன் தரிக்கவொட் டாவழி, மருமகனை மாமன் வஞ்சித் திடும்வழி, மாமனை மருமகன் வதைத்துக் கொல்லும்வழி குடியை முடிக்கும் கொடிய தீவழி, அடிபிடி சண்டை அகலாப் பெருவழி, மனிதரைப் பேயாய் மாற்றும் பாழ்வழி, இருவழி சுட்டும் இடைவழி யாய்வரும் வழியிது போல்இவ் வையகத்து எங்கும் உண்டோ அம்மா! உண்டோ அம்மா! அழுபவர் கண்ணி ஆறாய்ப் போம் வழிஐயோ! இவ்வழி ஆகாது ஆகாது." என்று இவர் குறிப்பிட்டுள்ளது மேற்கூறியனைத் தெளி வுறுத்துவதாக அமைகின்றது. இறுதியாக, கவிமணி குறிப் பிடும் அறிவுரை இது: 11. எம்பி எரிச்சப் படலம் - அடி (15-48)