பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கட்பண்புக் கோட்பாடு + 20了 → ஆதலால் எந்நாளும் அழியாத பொருளாம் ஆன்மாவை மேம்படுத்தி அறநெறியில் நின்று தீதெல்லாம் அறவொதுக்கித் திருவருளும் பெற்றுச் சிவஞானச் செல்வரெனத் தினம்வாழு வோமே." இங்ங்னம், நமது பண்பாட்டினையே உயிர்நாடியாகக் கொண்டுள்ளன. கவிமணி தே.வியின் பாடல்கள். இந்நெறி யைக் கடைப்பிடித்தே தமது வாழ்வின் பெரும்பகுதியிலும் பாடி வந்துள்ளார். கவிமணியின் பாடல்களை ஊன்றி நோக்கின், அவர் முற்போக்குக் கருத்துடையவர் என்பது தெளிவாகின்றது. அவர் தூய உள்ளமும் சீரிய நோக்கமும் கொண்டவர். மாசிலன் என்ற வாழ்வும் மதிநலத் தெளிவாம் எங்கள் தேசிக விநாய கத்தின் திகழ்தரும் சிறப்பை யாரும் பேசிடும் பொழுதி லெல்லாம் பெருமிதம் என்னுள் ஊறும் கூசிடும் எனது சொற்கள் குணமாகும் அவற்கு முன்னால் (1) என்பது நாமக்கல்லார் வாக்கு. தாம் வாழும் சமுதாயம் பலவகை இன்னல்களும் நீங்கி அதற்குரிய உயரிய நிலையை அடைய வேண்டும் என்ற ஆழ்ந்த உணர்ச்சியை உடையவர் கவிமணி. 12. வையமும் வாழ்வும் - உத்தம ஜீவிதம் - 7