பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 208 斗 கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு பொய்யகம் நீக்கி வஞ்சப் புலன்களை அடக்கி யாண்டு வையகம் முழுதும் வாழ வரந்தர வல்ல நல்லான் மெய்யகம் வணங்கி நின்று மேலொரு பொருளைப் போற்றிக் கையகம் கூப்பி' (6) நிற்பவர் எங்கள் கவிமணி என்பார் நாமக்கல் கவிஞர். இவை இவர்தம் எழுத்தில் நிழலிடுகின்றன. இவர் தமிழ் இலக்கியங்களில் ஊறித் திளைத்தவர். தமிழரின் வர லாற்றை நன்கு உணர்ந்தவர். தமிழ்மொழிப் பெருமை யெல்லாம் தண்மையும் உண்மை தானும் அமிழ்தென அதனைச் சொல்லல் அழிவிலா அறிவுக் காக குமிழ்தர இவற்றின் மேன்மை குலவிடும் கவியால் ஞானம் கமழ்தரச் செய்யும் (3) எங்கள் கவிமணி என்பார் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை. தமிழர்களின் உயர்ந்த குறிக்கோள்களிலும் ஒழுக்க நியதிகளிலும் ஆழங்கால் பட்டவர். துரும்பென மெலிந்த தேகம் துலங்கிடும் குளிர்ந்த பார்வை இருப்பினும் வலிய உள்ளம் இனியவே செய்யும் எண்ணம் பரம்பொருள் நினைவே காட்டும் பாரெல்லாம் பரந்த நோக்கம் கரும்பினும் இனிய சொற்கள் (4) கூறுபவர் கவிமணி என்பார் கவிஞர் நாமக்கல்லார். இவரு