பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- 212 卡 கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு போயுள்ளனர். இக்கொள்கையையொட்டியே பக்தர்களும் இயற்கையில் தோய்ந்து இறைவனை அநுபவிக்கின்றனர். காட்டிலும் நாட்டிலும், மண்ணிலும் விண்ணிலும், எல்லா இடங்களில் காணும் இற்கையழகுகளால், எம் பெருமா னின் அழகுக் கூறுகளில், மனத்தை பறி கொடுக்கின்றனர். தற்காலக் கவிஞர்களில் பாரதி, பாரதிதாசன் தம் கவிதைகளில் இயற்கையைப் புனைந்து புகழ்பெற்றனர். எடுத்துக்காட்டாகப் பாரதியார், விண்டு ரைக்க அறிய அரிதாய் விரிந்த வான வெளியென நின்றனை அண்ட கோடிகள் வானில் அமைத்தனை அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை: மண்ட லத்தை அணுவணு வாக்கினால் வருவ தெத்தனை அத்தனை யோசனை கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை என்று அகிலத்தின் காட்சியைக் (Cosmic vision) காட்டுவர். "புரட்சிக் கவி' யில் நிலவு பற்றி இரண்டு பாடல்கள் அற்புதமானவை. நீலவான் ஆடைக்குள் உடல்ம றைத்து நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தைக் கோலமுழு துங்காட்டி விட்டால், காதற் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச் சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்! சொக்க வெள்ளிப் பாற்குடமா அமுத ஊற்றோ! காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக் கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பி ழம்போ! 1. பா.க தோ.பா. மகாசக்தி வாழ்த்து - 7