பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கை வழி இன்பம் -j- 213 -j அந்தியிருளாற் கருகும் உலகு கண்டேன்; அவ்வாறே வான்கண்டேன்; திசைகள் கண்டேன்; பிந்தியந்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ? பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்? சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம் சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி இந்தாவென் றேஇயற்கை அன்னை வானில் எழில்வாழ்வைச் சித்திரித்த வண்ணம் தானே? இவை உதாரன் வாயிலிருந்து வந்த கவிதைகள். கவிமணி இயற்கை எழில்பற்றிச் சில பாடல்கள் பாடியுள்ளார். அவற்றை ஈண்டுக் காண்போம். இயற்கை: கவிஞர் வானத்தை நோக்குகின்றார். சிந்த னையோட்டம் செயற்படுகின்றது. வானம் கறுத்தால் மழை பெய்யும் மழை பெய்தால் மண் குளிரும் மண்குளிர்ந்தால் புல்தழைக்கும், புல் தழைத்தால் பசுமேயும் பசு மேய்ந்தால் பால்சுரக்கும் பால் சுரந்தால் கன்று குடிக்கும்; கன்று குடித்து மிஞ்சியதைக் கரந்து கொண்டு வந்திடலாம்; காப்பியில் விட்டுக் குடித்திடலாம்" இது குழந்தைகட்கு இயற்கை வட்டம் செயற்படுவதைக் காட்டுவது. தத்துவ நோக்கில் அசித்தின் பரிணாமத்தை யும், சித்தின் நுகரும் தன்மையினையும் விளக்குவதாகவும் அமைகின்றது. 2. ம.மா. இயற்கை இன்பம் - இயற்கை