பக்கம்:கவிமணியின் தமிழ்ப்பணி-ஒரு மதிப்பீடு.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 214 + கவிமணியின் தமிழ்ப்பணி - ஒரு மதிப்பீடு காலதத்துவம்: கால வட்டம் கார், கூதிர், முன்பனி, பின்பணி, இளவேனில், முதுவேனில் என்று ஆறு பிரிவு களாக இயங்குகின்றதை நம் முன்னோர் குறித்து வைத்துள் ளனர். இளவேனில் தான் ’வசந்தம் என்பது. ஒருவர் வாழ்க்கையில் 'வசந்தம்’ வந்தது என்றால் நல்ல சூழ்நிலை அமைந்து வாழ்க்கை இன்பகரமாக இருக்கும் என்பது பொருள். செடிகள் தளிர்த்து, மலர்கள் பூக்கும் காலம் வசந்தம். திருக்கோயில்களில் 'வசந்த உற்சவம் நடைபெ றுவதைக் காணலாம். மன்மதனுக்கு மலரம்புகள் ஆயுதங் கள். 'காமன் பண்டிகை. இக்காலத்தில்தான் கொண்டாடப் பெறுகின்றது. இந்த வசந்த காலத்தைக் கவிமணி ஐந்து எளிய பாடல்களால் வருணித்திடுவர்.' மின்னி மேகம் பரவுது, மெல்ல மெல்லத் துளிக்குது; என்ன சொல்லித் துளிக்குதென்று இயம்பு கின்றேன் கேளம்மா! (1) ‘மண்ணில் கொஞ்ச நாட்களாய் மறைந்து றங்கும் செடிகளே! கண்ம லர்ந்து வாருங்கள்; காலை யாச்சு தென்குது (2) வாசச் செப்பைத் திறவுங்கள்; வாரி யெங்கும் வீசுங்கள்; ஈசன் பாத பூசனைக்கு எழுந்தி ருங்கள் என்குது (4) வாட்ட மெல்லாம் நீங்கவே வசந்த காலம் வந்தது; மீட்டும் தன்மை காணலாம்; விரைந்தெ ழுங்கள் என்குது (5) 3. ம.மா. வசந்தம் - பக்.71